தண்டவாளத்தில் நின்று, ‘செல்பி’ எடுத்தால் அபராதம், சிறை தண்டனை – ரயில்வே துறை எச்சரிக்கை..!

கோவை : தெற்கு ரயில்வே சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது . இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோல், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று, ‘செல்பி’ எடுத்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது, 6 மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .