கோவை அருகே வீடுகளுக்கு மின் இணைப்பு பெற நகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டு மோசடி – 2 பேர் கைது..!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் தங்கராஜ் என்பவர் கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் 10 வீடுகளுக்கான கட்டிடம் கட்டியதில் நகராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் படிவம் 7 ஐ. போலியாக தயாரித்து எலச்சிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து மின் இணைப்புகள் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் முத்துசாமி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சோமனூர் செந்தில் நகரை சேர்ந்த தங்கராஜன் ( வயது 45) கருமத்தம்பட்டி நகராட்சியில் தற்காலிக பணியாளராக உள்ளசக்திவேல் (வயது 29) ஆகியோர் நகராட்சி ஆணையர் முத்திரையை போலியாக தயாரித்து ஆணையாளர் போன்று போலி கையெழுத்து போட்டு மின்வாரியத்தில் விண்ணப்பித்து மின் இணைப்பு பெற்றது தெரியவந்தது .இதை யடுத்து மோசடியில் ஈடுபட்ட தங்கராஜன், சக்திவேல்ஆகியோரை கருமத்தம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் வேறு யாருக்கு இது போன்று போலி முத்திரை மற்றும் ஆணையர் போன்று கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டு உள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.