24 மணி நேர டைம் தரேன்… என்னை முடிஞ்சா கைது பண்ணுங்க… போலீசாருக்கு சவால் விட்ட அண்ணாமலை..!

சென்னை: வட மாநில தலைவர்கள் பிரச்னை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு குறித்த தகவல் கிடைத்ததும் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள், 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன் என்று சவால் விட்டுள்ளார்.

வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலி வீடியோ பரவியது. இது தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. இது தொடர்பாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என ஒரு அறிக்கையில் கூறியிருந்தார். இந்நிலையில் போலீசார் அண்ணாமலை மீது கலவரத்தை தூண்டுதல், இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல் வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 153, 153A(1)(a),505(1)(b), ஐபிசி 505(1)(c) ஐபிசி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வட மாநில தொழிலாளர் விவகாரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தவறான தகவலை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பீஹார் பா.ஜ., டுவிட்டரை நிர்வகிக்கும் நபர் மீதும் 153, 153A(1)(a), 505(1)(b) IPC 505(2) ஐபிசி ஆகிய பிரவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜனநாயக குரலை நெறிக்கும் எண்ணத்தில் வழக்கு போட்டுள்ளனர். 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன். தமிழக அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.