வால்பாறை அருகே ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை – செவிலியர்கள் அச்சம்..!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்து உலாவிச் சென்றுள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்தகாட்சியை பார்த்த இரவு நேரப் பணியில் இருந்த செவிலியர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் வனவிலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருவதாகவும் இரவு நேரங்களில் இதுபோன்று வனவிலங்குகளின் நடமாட்டத்தால் நோயாளிகளுக்கோ அல்லது மருத்துவப்பணியாளர்களுக்கோ ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகள் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பணியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..