வால்பாறையில் பட்டப்பகலில் சாலையை கடந்து செல்லும் காட்டு யானைகளின் அழகிய காட்சி..!!

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் கூட்டமாகும் தனித்தனியாகவும் பகல் நேரங்களில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து இரவு நேரங்களில் மக்கள் குடியிப்புப்பகுதிகளில் நுழைந்து சேதங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றன இந்நிலையில் நேற்றையதினம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் மூன்று காட்டுயானைகள் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியிலிருந்து சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் அந்த அழகிய காட்சி வைரலாகி வருகிறது.