வெறும் 5 மணி நேரத்தில் 1000 கி.மீ தூரத்தை கடக்கலாம்… இந்தியாவிற்கு வருகிறது உலகிலேயே அதிவேகமான ஹைவே சாலை…

பெங்களூருவிலிருந்து மும்பைக்கு வெறும் 5 மணி நேரத்தில் கடந்து செல்லும் பசுமை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையைக் கட்டமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார்.

நாம் எல்லோரும் வெளிநாடுகளில் சாலைகள் தரமாக இருக்கிறது, இந்தியாவில் தான் மோசமாக இருக்கிறது என்று எல்லாம் பேசிக்கொண்டிருப்போம். இந்தியாவில் தரமான சாலைகளை ஏற்படுத்த மத்திய போக்குவரத்துத் துறை தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவில் தரமான சாலைகளைக் கட்டமைக்கும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலைத்துறை செய்து வருகிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகள் எனப் பல விதமான சாலைகள் ஆங்காங்கே கட்டமைக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்திய அரசிடம் உலகிலேயே அதிவேகமான சாலையைக் கட்டமைக்கும் திட்டம் இருப்பது தற்போது மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் மூலம் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நேசினல் எக்ஸ்சேஞ்ச் மெம்பர் ஆஃப் இந்தியா அசோசியேசன் சார்பில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டம் அந்த அசோசியேசனின் 12வது சர்வதேச மாநாடாகும். இந்த கூட்டத்தில் அவர் பேசும் போது தான் இந்த திட்டம் குறித்த விபரங்களைத் தெரிவித்தார்.

அவர் பேசும் போது இந்தியாவில் மும்பை – பெங்களூருவரை மொத்தம் தற்போது பசுமை எக்ஸ்பிரஸ் வே கட்டமைக்கப்பட்டு வருகிறது. இது பணிகள் முடிவடைந்தால் மும்பையிலிருந்து பெங்களூருக்கும், பெங்களூருவிலிருந்து மும்பைக்கும் வெறும் 5 மணி நேரத்தில் பயணம் செய்து விட முடியும் எனத் தெரிவித்தார். இந்த இரு நகரங்களுக்கும் இடையே தற்போது பயண நேரம் 17 மணி நேரமாக இருக்கிறது. இதை வெறும் 5 மணி நேரமாகக் குறைக்க முடியும் என அவர் கூறியிருப்பது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையே சுமார் 1000 கி.மீ தூரம் இருக்கிறது. இந்த தூரத்தை அவர் வெறும் 5 மணி நேரத்தில் செய்ய முடியும் எனஜ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது : “தற்போது பசுமை எக்ஸ்பிரஸ் ஹைவேகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் பெங்களூரு- மும்பை இடைே வெறும் 5 மணி நேரத்தில் பயணிக்கலாம். பெங்களூரு -புனே இடையே வெறும் 3.5 -4 மணிநேரத்தில் பயணிக்க முடியும். இதே போல 27 பசுமை நெடுஞ்சாலைகள் இந்தியாவிற்கு வரவிருக்கிறது.

டில்லி-டெகராடூன் இடையே 2 மணிநேரம், டில்லி – ஹரித்துவார் இடையே 2 மணி நேரம், டில்லி-ஜெய்ப்பூர் இடையே 2 மணி நேரம், டில்லி சண்டிகர் இடையே 2.5 மணி நேரம், டில்லி -அம்ரிஸ்டர் இடையே மணி நேரம், டில்லி- ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரம், டில்லி- காத்ரா இடையே 6 மணி நேரம், டில்லி- மும்பை இடையே -10 மணிநேரம், சென்னை -பெங்களூரு இடையே 2 மணி நேரம், லக்னோ – கான்பூர் இடையே அரை மணி நேரம், எனப் பயணம் சாத்தியமாகும்” எனக் கூறினார்.

இதைச் சாத்தியப்படுத்த மத்திய அரசு என்ன திட்டம் செய்து வருகிறது. எனத் தெரியவில்லை. இவர் சொன்ன மும்பை-பெங்களூரு 5 மணி நேரம் சாத்தியமாக வேண்டும் என்றால் இந்த இரு நகரங்களுக்கும் இடையே சுமார் ஆயிரம் கி.மீ இருக்கிறது. அப்படி என்றால் காரில் குறைந்த பட்சம் 200 கி.மீ வேகத்தில் பயணிக்க வேண்டும் அப்படிப் பயணித்தால் தான். 5 மணி நேரத்தில் மும்பையிலிருந்து பெங்களூரு சென்றடைய முடியும்.

இந்த உலகிலேயே அதிவேகமாக எக்ஸ்பிரஸ்வே என்றால் ஜெர்மனி நாட்டில் உள்ள ஆட்டோபான் எக்ஸ்பிரஸ்வே தான். இந்த சாலையில் பயணிக்க அதிகபட்ச வேக லிமிட்டே கிடையாது. ஆனால் இங்கு 130 கி.மீ அதிகமாகச் செல்லும் போது விபத்து நடந்தால் அதிகவேகத்தில் வந்ததால் குறிப்பிட்ட டிரைவர் மீது வழக்கு தொடரப்படும். இந்தியாவிலேயே இதுவரை அதிகபட்சம் 130 கி.மீ வேகத்தில் செல்லும் அளவிற்கு உள்ள அனுமதிகொண்ட தேசிய நெடுஞ்சாலைகள் தான் உள்ளன.

தற்போது இந்த மும்பை-பெங்களூரு பயணத்தை 5 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 200 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்பதைப் பார்த்தோம். ஆனால் இது ரியல் வேல்டிற்கு வரும் போது 230-250 கி.மீ வேகத்தில் பயணித்தால் தான். இந்த பயணத்தைச் சாத்தியமாக்க முடியும். ரியல் வேல்டில் இந்த கணக்கு மாறுபடுவதற்கு பிக்கப் மற்றும் சாலைகளில் கட்டமைப்பு உள்ளிட்ட பலவிஷயங்கள் காரணமாக இருக்கும்.

இவ்வளவு வேகத்தில் பயணித்தால் இதைச் சாத்தியமாக்கலாம் சரி இந்த பயணத்தைச் செய்யும் திறன் கொண்ட கார்கள் இந்தியாவில் இருக்கிறதா என்ற கேள்வி வரும். இருக்கிறது. ஆடி, பிஎம்டபிள்யூ,மெர்சிடீஸ்-பென்ஸ், ஜாக்குவார், லேண்ட்ரோவர் உள்ளிட்ட சில நிறுவனங்களின் சில கார்களில் 250 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறன் இருக்கிறது. இந்த கார்கள் இந்தியாவிலும் கிடைக்கிறது. மத்திய அமைச்சர் சொல்லுவது சாத்தியமானாலும் இந்த கார்களில் பயணித்தால் 5 மணி நேரத்தில் மும்பை-பெங்களூரு பயணம் சாத்தியம் தான்.

ஆனால் அதற்கு இந்தியாவின் போக்குவரத்து சட்டத்தை மாற்ற வேண்டியது இருக்கும். தற்போது வரை வெறும் 130 கி.மீ வேகம் வரை தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க அனுமதியிருக்கிறது. அதை சட்டப்படி இருமடங்காக உயர்த்தினால் மட்டுமே இது சாத்தியம். இது மட்டுமல்ல வெறும் சாலையும் கார்களும் மட்டும் இதற்கு முக்கியமல்ல. இவ்வளவு வேகத்தைத் தாங்கும் அளவிற்கு டிரைவருக்கு பயிற்சியும் முக்கியம்.

இந்த வேகத்தில் ரேஸ் கார்கள் செயல்படும். ஆனால் அவர்கள் தகுந்த பாதுகாப்புடன் டிராக்கில், முறையான பயிற்சியுடன் குறைந்த நேரம் தான் பயணம் செய்கிறார்கள். அதனால் தற்போது உள்ள டிரைவர்களுக்கு அதிக வேகத்திலும் காரை கண்ட்ரோல் செய்யும் திறனை வளர்க்கப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அரசு இப்படியான சாலை அமைத்தாலும் டிரைவர்களுக்கு இவ்வளவு வேகத்தில் கார்களை இயக்க முறையான பயிற்சியை வழங்கினால் மட்டுமே இந்த அதிவேக சாலைகளில் விபத்து இல்லாமல் பயணிக்க முடியும்.