மார்கழி தை தள்ளுபடி கஞ்சா ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம்…

அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் சி. தனம்மாளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொரட்டூர் கங்கையம்மன் கோயில் தெரு அருகே 20 வயது வாலிபர் மார்கழி மாதம் தை மாதம் கஞ்சா பாக்கெட் ஒன்று வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் இந்த கஞ்சா ஆந்திர மாநிலம் பத்ராசலம் பகுதியைச் சேர்ந்தது சூப்பர் கஞ்சா நீங்கள் வாங்கி அனுபவித்து பாருங்கள் உண்மை புரியும் என விற்பனை செய்து கொண்டிருந்தான் போலீசார் அவனை மடக்கி பிடித்து கைது செய்து அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர் இந்த கஞ்சாவை கொரட்டூர் பகுதியில் வெளி மாநில வாலிபர்களுக்கு அதிக லாபம் வைத்து விற்பனை செய்வதாக கூறியுள்ளான் அவனிடத்தில் இருந்த ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்த ன ர் அவனை கைது செய்த இன்ஸ்பெக்டர் சி.தனம் மாள் வழக்குப்பதிந்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார் குற்றவாளி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டான் கைது செய்யப்பட்ட அவனது பெயர் விவரம் வருமாறு சங்கர் வயது 20 தகப்பனார் பெயர் மஸ்தான் கங்கை அம்மன் கோவில் தெரு, கொரட்டூர் சென்னை