அதிக லாபம் தருவதாக கூறி கோவை இன்ஜினியரிடம் ரூ.8.75 லட்சம் மோசடி..!

கோவை கணபதியை சேர்ந்தவர் தர்மராஜ் ( வயது 32) இன்ஜினியர். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பணம் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நான் என் வீட்டில் இருந்த நகை வீடு கட்ட வைத்திருந்த பணம் உட்பட 8 லட்சத்து 88 ஆயிரத்து 597 ரூபாயை முதலீடு செய்தேன் .ஆனால் எனக்கு கூடுதல் பணம் எதுவும் கிடைக்கவில்லை. நான் முதலீடு செய்த தொகையும் வரவில்லை. தொடர்ந்து அவர்கள் மேலும் ரூ.5 லட்சத்து 62 ஆயிரம் செலுத்தினால் தான் ரூ. 18 லட்சத்து 75 ஆயிரம் கூடுதல் தொகை கிடைக்கும் என்று தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த போது அது போலி நிறுவனம் என்றும் நான் மோசடி செய்யப்பட்டதும் தெரிய வந்தது. எனவே நான் முதலீடு செய்த பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவர் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- ஆன்லைனில் வரும் தகவலை நம்பி யாரும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் .குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகவும், அதிக வட்டி தருவதாகவும் கூறி ஏமாற்றி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்..