அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது

அப்பார்ட்மெண்ட்டில் அழகிகள் இருப்பதாக கூறி பணம் மோசடி: சிறுவன் உட்பட இருவர் கைது

கோவை சவுரிபாளையத்தில் தனியார் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு உள்ளது. இங்கு காவலாளியிடம், சில வாலிபர்கள் தங்களின் செல்போனில் உள்ள சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டனர். அதை பார்த்த காவலாளி, அது போல் யாரும் இங்கு குடியிருக்க வில்லை என்று கூறினார். உடனே அந்த வாலிபர்கள், சமூக வலைத் தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், இந்த குடியிருப்பில் தான் தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பி னால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கூறியதால் பணம் அனுப்பி னோம் என்று கூறினார்கள். பணம் மோசடி அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி, அடுக்குமாடி குடியிருப்பு மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் பீளமேடு போலீசில் அளித்த புகாரில், எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக சிலர் போலியான முகவரியை கொடுத்து வாலிபர்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றி உள்ளனர். மேலும் எங்களது குடியிருப்பு குறித்து தவறான முறையில் சித்தரிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்தது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர் (24) மற்றும் கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சுபாஷ் சந்தர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் அதில் சுபாஷ் சந்தர் சிறையிலும், 17 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.