குடியரசு தலைவராக பதவியேற்ற பின் முதல் முறையாக திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி..!

குடியரசு தலைவராக பதவியேற்ற பின், முதல்முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

நேற்று, இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், குடியரசு தலைவராக பதவியேற்ற பின், முதல்முறையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.