வனத்துறை எச்சரிக்கை:  அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்

வனத்துறை எச்சரிக்கை:  அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல்

கோவை மருதமலையில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்து மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு இரவு ஏழு மணிக்கு மேல் அனுமதி அளித்த காரை யானை தூரத்திய சம்பவம்,

விவசாய நிலங்களுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டி இருந்தனர். இந்நிலையில் அந்த யானை கூட்டத்தை அங்கிருந்து மருதமலை வனப் பகுதியில் வனத் துறையினர் விரட்டினர். இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி வந்து இருப்பதாக கூறி, வனத்துறையின் எச்சரிக்கை மீறி மருதமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மலை அடிவாரத்தில் காவலரும் பேசும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.