பயணிகளின் கனிவான கவனத்திற்கு… கோவை வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து..!!

சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் பிக்வான் – வாஷிம்பே ரெயில்
நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதைகள் அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. எனவே கோவை வழியாக செல்லும் 4 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து கோவை, சேலம் வழியாக புனே செல்லும் தினசரி ரெயில் 6,8-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல புனேவில் இருந்து சேலம் கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் ரெயில் 7,9-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து
திருப்பூர், சேலம், திருப்பத்தூர் வழியாக ராஜ்கோட் செல்லும் ரெயில் 5-ந்
தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல ராஜ்கோட்டில் இருந்து
திருப்பத்தூர், சேலம் , திருப்பூர் வழியாக கோவை வரும் ரெயில் 7-ந்தேதி
ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.