கஞ்சா கேட்டு தகராறு: சிறையில் இருந்து விடுதலையான லாரி டிரைவக்கு இரும்பு கம்பியால் சரமாரி தாக்குதல்-வாலிபர்கள் 2 பேர் கைது..!

மேட்டுப்பாளையம் ஆணைக்கார வீதியை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 23).
லாரி டிரைவர்.

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் கைது
செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார்.
இந்த நிலையில் நேற்று இரவு மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி
பின்புறம் அவர் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த சங்கர் நகர் பகுதியை சேர்ந்த அபாபில் (30) மற்றும் கரிமேடு ஆனந்தன் (30) என்பவர்கள் செய்யது அன்வரிடம் கஞ்சா இருந்தால் கொடு என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் கஞ்சா இல்லை  என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி
ஜெய்லானி என்பவரை கொலை செய்தது நீதானே என்று கூறி கரிமேடு ஆனந்தன் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் செய்யது அன்வரின் கன்னத்திலும்
வயிற்றிலும் மாறி மாறி குத்தினார்.

இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனால் அபாபில் மற்றும்
கரிமேடு ஆனந்தன் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து
மேட்டுப்பாளையம் போலீசில் செய்யது அன்வர் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி
ஓடிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிகளிடம் விசாரணை நடத்தி
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.