கோவை அருகே உள்ள மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படுகிறது. இங்கு சித்திரைத் தமிழ் புத்தாண்டை யொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. பின்னர் 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு பால் , பன்னீர் , ஜவ்வாது ம சந்தனம் போன்ற 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டு என்பதால் சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆதிமூல ஸ்தான சுப்ரமணிய சுவாமி வள்ளி ,தெய்வானை ஆகியோருக்கு ஏராளமான பழவகைகள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் படைக்கப்பட்டது. காலை 6 மணிக்கு தீபாரதனை நடைபெற்றது.,காலை 8மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் கோவிலை சுற்றி உலா வந்தார். மாலை 6 மணிக்கு சாய ரட்ச பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தங்களது சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார் புத்தாண்டை யொட்டி அதிகாலை முதலே கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பக்தர்களுக்கு சுவாமி படம், பூ,விபூதி பூஜை செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மலைப்பாதையில் செல்வதற்கு 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மலைக்கோவில் பாதை மற்றும் கோவில் சார்பில் விடப்பட்ட மினி பஸ்களில் ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் விமலா,தக்கார் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மருதமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை









