கோவையில் உயர் ரக போதை பொருள் கடத்திய கேரளா வாலிபர்கள் கைது

கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் வாகன தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில், அவர்கள் உயர் ரக போதைப் பொருளான “Methamphedamine” ஐ விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

கடத்தப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இரு வாலிபர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் பாலக்காடு ஆழிக்கல் ஹவுஸ் பகுதியை சேர்ந்த அப்துல் ராஷீக் (21) மற்றும் ஜெசிர் (21) என்று தெரியவந்தது. இரண்டு நபர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு சென்ற சுமார் 6,00,000/- மதிப்புள்ள 151 கிராம் எடையுள்ள (வணிக தர எடை) Methamphedamine போதைப் பொருள்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.