சீனாவின் 54 மொபைல் செயலிகளுக்கு தடை-மத்திய அரசு முடிவு.!!

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவை உலவு பார்க்கும் விதமாக பல்வேறு செயலிகள் உள்ளதாக கூறி கடந்த ஆண்டில் பல சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் இருக்கும் மேலும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பியூட்டி கேமிரா, ஸ்வீட் செல்ஃபி எச்டி, விவா விடியோ எடிட்டர், ஆப் லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.