மனைவி புகாரில் ஜாமினில் சென்ற கணவன் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

 

பூந்தமல்லி, டிச, 5, மனைவி புகாரில் ஜாமினில் சென்ற கணவன் 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகததால் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு செய்தது. சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சிம்ரசித் கௌர் . இவருக்கும் மதுராந்தகத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணதாஸ் என்பவருக்கும் கடந்த 28.4.2012 அன்று சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சிம்ரசித் கௌரிடம் கணவர் கோபி கிருஷ்ணதாஸ் ரூ 10 லட்சம் மதிப்புள்ள நகைகள்,ரூ 5 லட்சம் ரொக்கம், வீடு ஆகியவற்றை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.இதுபற்றி சிம்ரசித் கௌர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் கோபி கிருஷ்ணதாஸ் மீது மோசடி புகார் கொடுத்தார்.அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி கிருஷ்ண தாஸை‌ கைது செய்தனர்.பின்னர் ஜாமினில் சென்றவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை.கடந்த 8, ஆண்டுகளாக கோர்ட்டு விசாரணைக்கு கோபி கிருஷ்ண தாஸ் ஆஜர் ஆகவில்லை. இதுபற்றி விசாரணை நடத்திய‌ பூந்தமல்லி நீதிமன்றம் கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத கோபி கிருஷ்ண தாஸை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு செய்தனர்.இவரைப் பற்றி தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கலாம்.