வீட்டில் வெள்ளி சாமான்கள் திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளி கரண்டி ,வெள்ளி டம்ளர் போன்ற பொருட்களை திருடிவிட்டாராம் .இது குறித்து விஜயகுமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு செய்து பொன்னாத்தி என்ற முத்துமாரியை நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.