மழைநீர் தீங்குவதை தடுக்க ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும்- கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் அறிவிப்பு..!

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ரெயில் நிலையம் அருகே உள்ள தரை பாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உப்பிலிபாளையம் தரைப்பாலம் மற்றும் ரெயில் நிலைய தரைப்பாலம், கிக்கானி தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற அதிவேக குதிரை திறன் கொண்ட மோட்டார் கொண்டு மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மழைநீர் வராமல் தடுக்க அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ரெயில் நிலைய தரை பாலம் தாழ்வான பகுதி இருப்பதால் சாக்கடை தூர்வாரப்படுகிறது. மேலும் 87 மற்றும் 88 வார்டு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார்கள் அதனால் மழைநீர் வெளியேற்ற வழி இல்லாமல் உள்ளது. வருவாய்துறை மூலமாக சரியான முறையில் சர்வே எடுத்து அதன் மூலமாக எங்கெங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் இருக்கிறதோ அதனை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.