திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்..!

கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla உள்ளிட்ட திமுகவினர் ஆஜர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், எழுதி முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்ட “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்” என்னும் புத்தகத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், பொதுமக்களுக்கு வழங்கியது தொடர்பாக போடப்பட்ட வழக்கு தொடர்பாக திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex Mla, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், ஏ.பத்மநாபன், ராஜா, ஆனந்த், சோமசுந்தம் ஆகியோர் உள்ளிட்டோர் கோவை ஜெம் எம் எண் 1 நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி மீண்டும் 3 ந்தேதி ஆஜராக உத்திரவிட்டார்.

இந்த நிகழ்வின்போது, வழக்கறிஞர்கள் அகஸ்டஸ்,என்.ஆர்.விக்ரம்,மருதுபாண்டியன் வினோத்குமார் சின்னத்துரை,அன்பு செழியன்,வெங்கடாசலம் விஜயசேகரன் தாமோதரன், லிங்கராஜா ஆகியோர் ஆஜராகினர்.

நீதிமன்றத்திற்கு, பகுதிக்கழகச் செயலாளர்கள் வி. ஐ. பதுருதீன், மார்க்கெட்மனோகரன், நகராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் டவுன் பா. ஆனந்தன், சாரமேடு பொறியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு, சபரிகோபால் வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் ஹைவேஸ் தண்டபாணி, மற்றும் அக்ரி பாலு, பாலசுப்பிரமணியம்,கஸ்தூரி அருண்,தினேஸ், சிஎன்.வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.