இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம்- போக்குவரத்தில் மாற்றம்..!

கோவை அருகே உள்ள பேரூரில் அருள்மிகு பட்டீஸ்வரர் கோவில் உள்ளது இக்கோவிலில் தேரோட்டம் இன்று ( செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது. இதனால் பேரூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுவாணி ரோடு-பேரூர் ரோட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து பேரூர் வழியாக ஆலாந்துறை, தொண்டாமுத்தூர், மாதம்பட்டி ,செம்மேடு, ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்வபுரம் சிவாலயா பஸ் நிறுத்தத்துக்கு தெற்கே இடதுபுறம் சேத்து மாவாய்க்கால், புட்டு விக்கி, சுண்டக்காமுத்தூர் வழியாக செட்டி பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சிறுவாணி மெயின் ரோட்டின் வழியாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை , மாதம்பட்டி, சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவை நகருக்கு வரும் வாகனங்கள் இதே வழியாக திருப்பி விடப்படுகிறது. இந்த போக்குவரத்து மற்றும் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்கும். என்றுபேரூர் போலீசார் தெரிவித்தனர்.