கோவையில் அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் திறப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூரில் அமைந்துள்ள அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தெற்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின்படி மதுக்கரை வட்டாட்சியர், போத்தனூர் காவல் ஆய்வாளர் மற்றும் வெள்ளலூர் கிராம நிர்வாக அலுவலர் , கோவில் படிமாத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோரின் முன்னிலையில் 12.08.2026 புதன் கிழமை அன்று எமதர்மராஜா திருக்கோயில் படிமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் வழிபாட்டிற்காக முறைப்படி திறக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் இனி வழக்கம்போல பூஜைகள் நடைபெறும்.

தரிசன நேரம்: தினமும்: காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

இத்திருக்கோயிலை முறைப்படி திறந்து பூஜைகள் நடைபெற ஆதரவளித்து உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் திருக்கோயில் படிமாத்தார்கள் சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.