டெல்லி பறக்கும் எடப்பாடி.. அமித் ஷாவை பார்க்க முடிவு? பின்னணி என்ன..?

சென்னை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

அவரின் இந்த பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.

அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்லப்படும் நிலையில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில விஷயங்களை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி இருக்கிறாராம்.

அமித் ஷாவிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிய அண்ணாமலை.. தமிழ்நாட்டில் பாஜக எம்பிகளை பெறுவதை விட ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம். 2024 முக்கியம் இல்லை. 2026தான் முக்கியம். 2024ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நாம் எப்போதும் 3வது இடத்திலேயே இருப்போம். நாம் இரண்டாம் இடத்திற்கு வர வேண்டும் என்பதே முக்கியம், அதை செய்ய நாம் தனித்து களமிறங்க தயாராக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியதாக கூறப்படுகிறது.

அதோடு தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவது பற்றியும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். அமித் ஷாவிடம் இந்த ரிப்போர்ட் பாஜக நிர்வாகிகள் சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளதாம். இந்த நிலையில்தான் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரைவில் டெல்லி பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பயணத்திற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீப காலமாக அதிமுக – பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை நிலவி வருகிறது. முக்கியமாக பாஜகவினர் அதிமுகவினரை விமர்சனம் செய்வது தீவிரம் அடைந்து வருகிறது.

அதோடு இரண்டு கட்சிகளின் கூட்டணியும் மொத்தமாக முடிவிற்கு வருவதற்கான அறிகுறியும் தெரிய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டு இருக்கிறாராம். அவர் இப்படி நேரம் கேட்க 3 காரணங்கள் இருக்கிறதாம். முதல் காரணம் – டெல்லி பாஜகவுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது. அந்த உறவு தொடரும். வெறுமனே தமிழ்நாடு பாஜகவுடன்தான் மோதல். தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் எங்களை பெரிய கட்சியாக உரிய மரியாதையோடு நடத்த வேண்டும் என்று பேச இருக்கிறாராம். தமிழ்நாடு பாஜகவை கட்டுப்படுத்த வேண்டும் என்று டெல்லியிடம் எடப்பாடி சொல்ல போகிறாராம்.

இது போக காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக நெருங்கும் சூழ்நிலை இல்லை. காங்கிரஸ் – திமுக மிகவும் நெருக்கமாக சேர்ந்து உள்ளது. இந்த கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும் போது பாஜகவை விட கூடாது, மாநிலத்தில் ஆட்சியில் இல்லை, அதனால் தேசிய கட்சியின் சப்போர்ட் தேவை என்ற நிலைப்பாட்டை எடப்பாடி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காரணம் 3 – இது போக அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதில் சாதகமான முடிவு வர எடப்பாடி அமித் ஷாவிடம் ஆலோசனை கேட்பார் என்றும் கூறப்படுகிறது.