கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ள ‘பிபோர்ஜாய்’ புயல் – இன்று முதல் 5 நாட்களுக்கு மழை.!!

மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது.

நேற்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. கடந்த 7ஆம் தேதி காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் பிப்பர்சாய்” நேற்று முன்தினம் காலை 11:30 மணி அளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு இசையில் நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்க அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு – வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது; அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தொடர்ந்து வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..