கோவையில் தொடரும் சைபர் கிரைம் மோசடி… சிம் போர்ட் செய்து நூதன கொள்ளை- பணம் பறித்த மர்ம கும்பலுக்கு வலை..!

கோவை மரக்கடை பகுதி சேர்ந்தவர் முஹம்மது கான். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் 40 லட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து நெட் பேங்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இவரது கம்பெனியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் நம்பர் போர்ட் செய்யப்பட்டு ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் நடந்திருக்கின்றது. இதுகுறித்து சைபர் காவல் நிலையத்தில் முகமது கான் புகார் தந்திருக்கின்றார் . புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரிமினல்களை தேடி வருகின்றனர் . இந்த வருடத்தின் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முதல் வழக்காக சிம் போர்ட் மோசடி செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு பதியப்பட்டு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..