அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் எதிர்பார்த்த அந்த வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு கடந்த மாதம் 29 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணை வந்தபோது, ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு தரப்பு நேரிடமும் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அதில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கும், கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், உயர்நீதிமன்றத்தை நாட ஓ பன்னீர்செல்வத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதில், பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு முடிவு எடுக்கும். எனவே, உயர் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு ஓ பன்னீர் செல்வதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு முடிவை எதிர்த்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு நாளை  (ஆகஸ்ட் 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.