கொரோனா தடுப்பூசிகளை உலகளவில் திரும்பப் பெறுகிறது ஆஸ்ட்ராஜெனகா நிறுவனம்..!

கோவிஷீல்டு தடுப்பூசி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெறுவதாக ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.கொரோனா காலக்கட்டத்தில் உலகமே முடங்கியிருந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பெரும் வரப்பிரசாதமாக போற்றப்பட்டது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்நிலையில், பிற நாடுகளைப் போலவே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் ஒரு கோடியை 70 லட்சம் பேருக்கு அஸ்ட்ராஜெனகாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்பு மற்றும் நிரந்தமான பாதிப்புகள் ஏற்படுத்தப்படுவதாக வழக்குகள் தொடரப்பட்டன. இங்கிலாந்தில் மட்டுமே இதுவரை 51 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தனக்கு மூளையில் ரத்த உறைந்ததாக ஜேமிஸ் காட் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். ரத்தம் உறைதல் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதால் பெரும் பிரச்சினையாக பூதகரமாக சர்ச்சை கிளம்பியது.

இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கடந்தாண்டு மே மாதத்தில், தடுப்பூசியால் பொதுவாக ரத்தம் உறையாது என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அரிதிலும் அரிதாக டிடிஎஸ் என்ற ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தடுப்பூசி நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.

தடுப்பூசி நிறுவனமே ரத்தம் உறைதல் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நிலையில், இது தடுப்பூசி செலுத்தியவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியர்களிடையேயும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஸ்ட்ராஜெனகா கண்டுபிடித்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்ற சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து மத்திய அரசுக்கு விற்பனை செய்து, இந்தியாவில் மட்டுமே சுமார் 80 கோடிக்கும் அதிகமானவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருந்தனர். அதாவது சுமார் 160 கோடி கோவிஷீல்டு டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம். இதன் காரணமாக கொரோனா தடுப்பூசிகளை திரும்பப் பெற்றுள்ளது. அதேசமயம் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .