முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி கோவை இன்ஜினியர் தற்கொலை..!

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால் இவரது மகன் வரதயகிரிவு ராம் (வயது 22) பி.டெக் பட்டதாரி.இவர் சாப்ட்வேர் என்ஜினியரிங் வேலை தேடி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.இந்த நிலையில் நேற்று அவர் தனது பெறோரிடம் தலைவலிப்பதால் தனது அறைக்கு தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகத்தில் கதவை தட்டியும் திறக்கவில்லை .அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அக்கம்.பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பரர்த்தனர். அப்போது தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் முழுவதும் மூடி கழுத்தை சுற்றி கயிறு கட்டியபடி மயங்கி நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர் .அவர்கள் விரைந்து வந்து அவரது உடலை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவரது தலையில் ஒரு கட்டி இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார் .மேலும் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக உத்தரவு வந்தது. இதனால் மன உளைச்சலின் காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.