கோவை உப்பிலிபாளையம், வேலப்பன் நகரை, சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 55) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் “ஆதித்யா பிரிண்ட் பேக்கேஜ்” என்ற நிறுவனம் நடத்தி வருகிறார் .இவர் எஸ். எஸ். குளம். கள்ளிபாளையத்தைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர்கள் சுந்தரசாமி (வயது 50) சூலூர் பிரிவு பக்கம் உள்ள குரும்ப பாளையம் மகேஸ்வரன் (வயது 43) ஆகியோரிடம் தொழில் வளர்ச்சிக்காககடந்த 4ஆண்டுகளுக்கு முன் ரூ 3.47 கோடி கடன் வாங்கி இருந்தார். இதற்காக அவரதுநில பத்திரங்களை ஒப்படைத்து இருந்தார்.இந்த நிலையில் வாங்கிய கடனை கொடுத்து பத்திரத்தை திருப்பசென்ற போது ஜனார்த்தனனை பைனான்ஸ் அதிபர்கள் சுந்தரசாமி |மகேஸ்வரன் ஆகியோர் திட்டி மரக்கட்டையால் தாக்கினார்களாம். இதில் ஜனார்த்தனன் படுகாயம் அடைந்தார்.அதிக வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது , .அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பீளமேடுபோலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவுசெய்து பைனான்ஸ் அதிபர்கள்சுந்தரசாமி ( வயது 50 )மகேஸ்வரன் ( வயது 43) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது கந்துவட்டி தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply