வால்பாறையில் மக்கள் இயக்கத்தினர் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ஆலோசனைக்கிணங்க நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் வால்பாறையிலுள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் மாணவர்களை சந்தித்தும் பொதுமக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளிலும் தொடர்ந்து நகரை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்து நகரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு துரித விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர் அதேபோல வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் ராபின் சன் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்