சென்னை புழல் சிறையில் மோதல்… வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் அடிதடி.. ஒருவருக்கு காயம்..!

சென்னை: சென்னை புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதிக்கொண்டனர், இதில் ஒருவர் காயம் அடைந்தார்.

இந்த மோதல் தொடர்பா சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையின் புறநகர் பகுதியான புழலில் மிகப்பெரிய சிறை இருக்கிறது. இது 2006ஆம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டது. நவீன வசதிகளுடன் 221 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

300-க்கும் குறையாத தண்டனைக் கைதிகள், 2,003 விசாரணைக் கைதிகள், 150 பெண் கைதிகள் என மூன்று விதமான கைதிகளுக்கும் தனித்தனியான சிறைகளுடன் ஒரே நேரத்தில் 3,000 கைதிகளை அடைக்கும் வசதி புழல் சிறையில் உள்ளது. 30 அடி உயரம் கொண்ட புழல்சிறை சுவரின்மீது ஒன்றரை அடி உயரத்துக்கு மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

புழல் சிறை வளாகத்தைச் சுற்றி 15 கண்காணிப்புக் கேமராக்களுடன், கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. புழல் சிறை வளாகத்தில் விசாரணைக்கைதிகள், தண்டனைக் கைதிகள், பெண்கள் சிறை என மூன்றுக்கும் தனித்தனி அதிகாரிகள் இருக்கிறது. இவை அனைத்தும் தனித்தனியாகவும் நிர்வாகம் செய்யப்படுகிறது.

புழல் சிறையில் ஒவ்வொரு பிளாக்குக்கும் 3 முதல் 4 காவலர்கள் வரை பாரா பார்க்கிறாரக்ள். 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து பணி மேற்கொள்வார்கள். பொதுவாக மற்ற பிளாக்குகளுக்கு வார்டனும் ஹெட் வார்டனும் பொறுப்பாக இருப்பர். ஆனால் உயர் பாதுகாப்பு பகுதிக்கு ஹெட் வார்டனுக்கு மேல் அசிஸ்டென்ட் ஜெயிலர், டெபுடி ஜெயிலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மேல் புழல் ஜெயிலர் இருப்பார்.

சென்னை புழல் சிறையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் கைதிகளுக்குள் அவ்வப்போது மோதல் நடக்கிறத. குறிப்பாக வெளிநாட்டு கைதிகள் மோதல் அடிக்கடி நடந்துள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு கைதிகள்புழல் சிறையில் தான் அடைக்கப்படுகிறார்கள். குறிப்பாக பெண் வெளிநாட்டு கைதிகள் புழல் சிறையில் மட்டுமே அடைக்கப்படுகிறார்கள். வெளிநாட்டு பெண் கைதிகள் அடிக்கடி மோதிக்கொள்வது நடக்கிறது. அண்மையில் கூட பெண் காவலரை வெளிநாட்டு பெண் கைதி தாக்கிய சம்பவம் நடந்தது.

இந்நிலையில் தற்போது ன்னை புழல் சிறையில் வெளிநாடடு பெண் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்து. நைஜீரியாவைச் சேர்ந்த எனினி மோனிகா, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காகோசி ஸ்டெல்லா ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலில் லிஸி என்ற கைதிக்கு காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புழல் சிறையில் கைதிகள் மோதிக்கொண்ட விவகாரம் குறித்து சிறை அதிகாரிகள் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் புழல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.