கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை..!!

கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை…

கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 20 பள்ளி கூடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிகளுக்கு மாற்றிவிடப்படுகின்றனர். எனவே தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து பள்ளிகளை இயக்க வேண்டும், மாணவர்கள் கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

 

2000 மாணவர்களுக்கு 3 வாபேசன் 

மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும் போதுமான கழிப்பறைகள் நாப்கின்களை எறித்து அழிக்கும் இயந்திரமும் இல்லை மேலும் பராமரிப்பு இன்றியும், துர்நாற்றம் வீசுகிறது, மேலும் குழாய்கள் மற்றும் டேப்புகள் உடைந்தும் உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுவார்கள். கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை, மேல்நிலை தொட்டி போதுமானதாக இல்லை சிறுநீர் கழிப்பிடங்கள் கால்வாய் போல் கட்டி விடப்பட்டுள்ளதால் சிறுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் வைரஸ் கிருமிகள் உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் மாணாக்கர்களின் உடல்நலம் மிகவும் கேள்வி குறியாக மாறிவிடும்

போதுமான பராமரிப்பு இல்லாததால் பள்ளி வகுப்பறையில் நீர் கசிந்து ஓதம் 

மே 1ஆம் தேதி முதல் மாநகராட்சி பள்ளி கழிப்பிடங்களுக்கு பராமரிப்பு பணிக்கு ஒப்பந்தங்களை, ஒப்பந்ததாரர்களிடமிருந்து வழுகட்டாயமாக பிடுங்கி, வாய்மொழி உத்தரவாக அனுபவம் இல்லாத ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், இனி பள்ளிகளின் கழிப்பிட பராமரிப்பு சுகாதாரம் என்பது அதோ கதி தான் என்று பெற்றோர்கள் புலம்புகிறார்கள்.

ஒப்பணக்கார வீதியில் உள்ள மகளிர் பள்ளி மிகவும் பழமையான கட்டிடம் உரிய பராமரிப்பு இன்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஐந்து வகுப்பறைகள் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பயன்படுத்த முடியாததால் மூடி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மாணவர்கள் சேர்க்கை தடைபடுகிறது.

ரத்தினபுரியில் உள்ள மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு இல்லாததால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆசிரியராக பணியாற்றி அரசியலுக்குள் நுழைந்து, மத்திய மண்டல தலைவராக இருக்கும் மீனாலோகு அவர்கள் தனது வார்டில் மிகவும் கேவலமாக இருக்கும் பள்ளிக் கழிப்பிடத்தை புனரமைத்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோவை மாநகராட்சி கல்வி குழு தலைவரும், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான மாலதி  சிந்தித்து மாநகராட்சி பள்ளிகள் பூங்காளின் நிலை குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது,
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு, மகளிர் அணி சார்பில் பூம்புகார் நகரில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஏழை எளியவர்களுக்கு இனிப்பு வழங்கி நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த ஆண்டுகளை விடவும் இந்த கல்வியாண்டில் பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று, அதிக மாணவர்கள் , மாணவிகள் வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு கல்விக் குழுவின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநகராட்சி சார்பில் ஐந்து பூங்காக்கள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகளை பராமரிக்கவும், புனரமைக்கவும், வகுப்பறைகள் கட்டவும், பள்ளி கழிப்பிடங்களை புதுப்பிக்கவும், பராமரிக்கவும், மேயர் அவர்களிடமும், மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கை மனு பள்ளி மாணவ மாணவியர்கள் நிலை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாமன்ற கூட்டத்திலும் அதற்கான கருத்துரை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிக்கூடங்களை புனரமைக்கவும் முழுமையாக என்னை அர்ப்பணித்துள்ளேன். அரசுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நற்பெயரை ஏற்படுத்தும் வகையில் பணியாற்ற உறுதி கொண்டு உள்ளேன். என்று இவ்வாறு கூறினார்..