முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை வருகை – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் இன்று ( சனிக்கிழமை) சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 11 மணிக்கு கோவை வந்தார் .கோவை விமான நிலையத்தில் அவருக்கு ‘அமைச்சர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர் . வரவேற்பு ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மண்டபத்துக்கு சென்றார்.விமான நிலையத்திலிருந்து சின்னியம்பாளையம் வரை தொண்டர்கள் ரோட்டில் இருபுறமும் திரண்டு நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு மாற்றுக் கட்சியினர் 3 ஆயிரம பேர் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் அவிநாசி ரோட்டில் உள்ள “லீ மெரிடியன்” ஓட்டலுக்கு சென்றார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார் . பின்னர் மாலை 3 மணிக்கு அங்கிருந்து கார் மூலமாக கருமத்தம்பட்டி செல்கிறார் . கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலினுக்கு பாராட்டு விழா.பின்னர் தமிழக அரசு சார்பில் விசைதறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து விசைத்தறி கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார் .இன்று இரவு 8 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை ஒட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல் போலீஸ் ஐஜி சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.