கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது

கோவை கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா : வருகிற 7, 8 ம் தேதி நடக்கிறது

கோவையில் முதல் முறையாக
வரும் 7, 8 – ம் தேதிகளில் கொடிசியாவில் செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. இதுகுறித்து செட்டிநாடு திருவிழா ஒருங்கிணைப்பாளர் முத்துராமன், தலைவர் ராமு மற்றும் லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை விழாவின் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகம் டி அரங்கில் வரும் 7, 8 – ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை செட்டிநாடு திருவிழா நடைபெற உள்ளது. செட்டிநாடு பகுதியை சேர்ந்த பல பொருட்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும். 80 மால்கள் அமைக்கப்பட உள்ளன. கடை வீதியில் பொருட்கள் வாங்கலாம். நாம் சிறுவயதில் விளையாடி மறந்து போன பல பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடலாம். அறுசுவை சைவ, அசைவ செட்டிநாடு விருந்து உண்ணலாம். அரங்கில் விற்கப்படும் அழகிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி செல்லலாம். ஆயிரம் ரூபாய் செலுத்தி ராயல்டி பாஸ் பெறுபவர்களுக்கு ஒருவேளை உணவும், செட்டிநாடு உணவு முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்படும். அவர்கள் சமைத்தும் பார்க்கலாம். ராயல்டி பாஸ் பெற 6383911627 என்ற எண்ணிலோ, www.neucbe.com என்ற இணைய தளத்திலோ தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விழாவினை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் துவக்கி வைக்கிறார். மாநகராட்சி கமிஷனர் பிரதாப் சிறப்பிக்க உள்ளார்.
செட்டிநாடு குழும நிறுவனங்கள் தலைவர் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
_______