சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டு வருகின்றன. பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அதற்கு தேவையான சார்ஜ் ஏற்றும் வகையில், பெட்ரோல் பங்குகளை போல, சார்ஜிங் மையங்களை ஏற்படுத்த மத்திய, மாநில அரசிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
பொது போக்குவரத்தில் அதிக மின்சார வாகனங்களை பயன்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக வங்கிக் கடன் வழங்குவது, வாகனங்களை வாடகைக்கு வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் மூன்று கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.
தற்போது, மின்சார வாகனங்களுக்கு, சார்ஜ் செய்ய தற்போது ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்தாண்டுக்குள் அதிகளவில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டால் கட்டணம் குறையும்.
இந்த நிலையில், தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், தமிழகம் முழுதும் உள்ள நெடுஞ்சாலை ஓரங்களில் 600க்கும் மேற்பட்ட ‘சார்ஜிங்’ மையங்களை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, முக்கிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, வாகனங்களை அதிகம் நிறுத்தும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என, இந்தாண்டுக்குள் 600 சார்ஜிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply