கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் பின்புறம் டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகிறது. கடையுடன் சேர்ந்து டாஸ்மாக் பாரும் உள்ளது. அதே சாலையில் அதற்கு முன்னதாக விநாயகர் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென்று கோவிலுக்கு எதிரே புதியதாக டாஸ்மாக் பார் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ...

வாஷிங்டன் : சீனாவுக்கு அந்த நாட்டின் கரன்சியான ‘யுவான்’ வாயிலாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால், சர்வதேச அளவில் டாலருக்கான முக்கியத்துவம் குறைந்தவிடும் என்பதால், அமெரிக்கா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.தற்போது உலகெங்கும் நடக்கும் வர்த்தகங்களில் பெரும்பாலும், அமெரிக்காவின் கரன்சியான டாலரின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சவுதி ...

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச ...

கொரோனாவை மிகவும் திறமையாக கையாண்டதாக கூறிக்கொண்ட சீனா, ‘ஸ்டெல்த்’ எனப்படும் ஒமைக்ரான் கொரோனாவின் துணை வகை வைரஸால் ஆட்டம் கண்டுள்ளது. இன்று சீனாவில் 24 மணி நேரத்தில் 5,200 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது ஒமைக்ரானின் புதிய ...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,876 பேருக்கு ...

உக்ரைனில் ரசாயன ஆயுத தாக்குதலை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக நேட்டோ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 20வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் ...

நேட்டோ அமைப்பில் இணையப் போவதில்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய கூடாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து வந்தார் . ஆனால் அதனை மீறி நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்கான அனைத்து முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்கொண்டு வந்தார் . இந்நிலையில் , ரஷ்ய அதிபரின் உத்தரவை ...

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை இந்தியா இறக்குமதி செய்வது, 47 சதவீதம் குறைந்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ‘சிப்ரி’ நிறுவனம், உலக நாடுகளின் ஆயுதக் கொள்முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2012 – 16 மற்றும் 2017 – 21ம் ஆண்டுகளில், இந்தியாவின் ராணுவ தளவாடங்கள் இறக்குமதி, 21 ...

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 19 நாளாக தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், இரு நாடுகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான முயற்சிகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, ரஷ்யாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நாடுகள் ...

கோவையை அடுத்த சூலூர் பக்கமுள்ள பட்டணம் ,ஐஸ்வர்யா நகரைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (திங்கள்) வெள்ளிங்கிரி கோவிலில் திருமணம் நடப்பதாக இருந்தது.கோவிலில் திருமணம் பதிவு செய்வதற்கான சான்றிதழ்களை கொடுத்து விட்டு வருவதாக இருசக்கர வாகனத்தில் பாலகிருஷ்ணன் ...