தமிழ்நாட்டில் 5 நாட்கள் நடந்த அதிரடி சோதனையில் 1.67 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் – 102கடத்தல் வாகனங்கள் பறிமுதல். 3,187 பேர் | கைது.டிஜிபி சைலேந்திரபாபு தகவல், கோவைஏப்2 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று காலை 11 மணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அங்குள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை திருப்பூர் மாநகர மற்றும் கோவை சரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்..
இந்த கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது:- ஆப்ரேஷன் “2 – 0 “என்ற திட்டத்தின்படி கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். குட்கா போன்ற போதை பொருட்களை அறவே ஒழிக்கப்பட வேண்டும். போதைக்கு அடிமையானவர்களை உரிய ஆலோசகரிடம் அனுப்பிவைத்து அந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் ஒன்றிணைத்து தகவல்களை சேகரிப்பது சாலை விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுடன் சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்கள் மாணவர்கள் வாகனம் ஓட்டுவது இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பது சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது காவலரின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும். காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு வழங்குவது உள்ளிட்ட வழிவகை செய்யப்பட வேண்டும் .28 – 3- 22 முதல் 1-4 -22 வரை தமிழ்நாடு முழுவதும் 3187 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து சுமார் 1.77 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களும் |102 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார் . கூட்டத்தில் கோவை சரகம் கோவை மற்றும் திருப்பூர் மாநகரத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பண வெகுமதியுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி .சுதாகர் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபு , டி .ஐ.ஜி. முத்துசாமி,போலீஸ் சூப்பிரண்டுகள் சசிமோகன், பத்ரிநாராயணன் ,அசிஸ் ராவத், துணை போலீஸ் கமிஷனர்கள் உமா, ஜெயச்சந்திரன், டாக்டர் அபினவ் குமார் ,செந்தில் குமார் ,செல்வராஜ் ரவி முரளிதரன் மற்றும் கூடுதல் எஸ்.பி.க்கள், டி..எஸ்.பி க்கள் பங்கேற்றனர்.
Leave a Reply