நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்..!

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியா வருகிறார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நாளை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு வரும் முதல் உயர்மட்ட பயணமாகும்.

லாவ்ரோவ் தனது இரண்டு நாள் சீன பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வருகிறார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 31 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை இந்தியாவுக்கு பயணமாக மேற்கொள்கிறார் என தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்ய அமைச்சர் இந்தியா வருகை தருகிறார்.