தமிழ்நாட்டில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் அறிவிப்பு. தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 9-ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வரும் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ...

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (நவ.6) நடைபெறவிருந்த ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம், அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை ...

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோபகுமார் (வயது 57). இவரது மகள் கவுரி (17). கவுரி அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல மகளை பள்ளியில் விடுவதற்காக கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றார். அவர்கள் சீர்தார் சந்திப்பு பகுதியில் சென்றனர். ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை எஸ்டேட் புதுபாடி பகுதியில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அதிகாலை 3 காட்டு யானைகள் சேதப்படுத்தியது. கோவிலின் சுற்று சுவரை இடித்து தள்ளி கருவறையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துத் போட்டு சேதப்படுத்தியது.அந்த சத்தத்தை கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் யானைகளை அங்கிருந்து ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. சமீப நாட்களாக குடியிருப்புகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி தமிழகம் சாலையில் வெஸ்டோடா பகுதியில் சிறுத்தை புகுந்தது. அங்குள்ள சுற்றுச்சுவரை தாண்டி குதித்து வீட்டுக்குள் நுழைந்தது. ...

கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண். பி.பி.ஏ., பட்டதாரியான இவர் தற்போது தையல் வகுப்புக்கு சென்று வந்தார். இளம்பெண் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் ...

கோவையில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் முபின் என்பவன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. முபின் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாளராக செயல்பட்டு விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உளவுத்துறை போலீசார் முபினை போல ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் இளைஞர்கள் உள்ளனரா? என்று தீவிர விசாரணை ...

டெல்லி: இந்தியாவின் முதல் உளவு சாட்டிலைட் தனது 13 ஆண்டு பணிக் காலத்தை வெற்றிகரமாக முடித்து உள்ளது. இந்தியாவில் கடந்த 2008இல் நடந்த மும்பை பயங்கரவாதிகள் தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானில் இருந்து கடல்வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் தான் நமக்கு உளவு பார்ப்பதற்கு என்றே தனியாக ...

உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பினர் திட்டம். தமிழ்நாடு முழுவதும் நாளை நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், கன்னியாகுமரியில் ...

கோவை மாவட்டத்தின் பிரதான சாலைகளில் ஒன்று திருச்சி சாலை. இங்கு எப்போதும் வாகன போக்குவரத்து என்பது பரபரப்புடன் இருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி சாலை உழவர் சந்தை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரின் முன்பகுதி திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. காரில் இருந்த ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியேறி ...