கோவை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பக்கம் உள்ள கறுப்பு கோட்டத்தை சேர்ந்தவர் செபஸ்திராஜ் இவரது மகன் பிராங்க்ளின் ஆரோன் ( வயது 25 ) இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பி.இ படித்து முடித்தார். பின்னர் கோவைக்கு வந்து வேலை தேடினார். வேலை கிடைக்கவில்லை .இந்த நிலையில் உணவு சப்ளை செய்யும் “சுவிக்கி” வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை .பி.இ.படித்து விட்டு இந்த வேலை செய்வதா? என்று நண்பருடன் புலம்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் அவர் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Leave a Reply