கடலூர்: வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. ...

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை ...

சமீபமாக பனிப்புயலால் உறைந்து போன அமெரிக்காவில் அடுத்து கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பொழிந்து வரும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ...

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் வகையில், வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று ...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் முக்கிய வர்த்தகப் பகுதியாக இருக்கும் துபாய் பிற வளைகுடா நாடுகளை விடவும் அதிகப்படியான விதிமுறை தளர்வு, வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் துபாய் அரசு தனது வருவாயைக் கச்சா எண்ணெய் அல்லாத துறையில் முதலீட்டு வாயிலாக அதிகரிக்க முடிவு செய்திருக்கும் இதேவேளையில் சுற்றுலாத் துறையைச் சார்ந்தும் அதிக வருவாய் ...

கோவை மாவட்டம் காரமடை டீச்சர்ஸ் காலனியில் உள்ள புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் அருள் தாஸ். இவரது மகன் ஜோவா பிரின்ஸ் சாலமோன் (வயது 19) இவர் நேற்று மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். காரமடையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது திடீரென்று நிலைத் தடுமாறி போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் பைக் ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அக்கம்மாள் காலனி சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 52) பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.இவர் 31 ஆம் தேதி சொந்த ஊரான நெல்லைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வந்தவர் துடியலூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இது ...

கோவை ஆலந்துறை பக்கம் உள்ள கோட்டை காடு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து .இவரது மகள்  கீர்த்தனா ( வயது 16) மத்வராயபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று தனது தாத்தா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் சிவகாமி ஆலந்துறை போலீசில் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனை சந்தித்து அளித்தனர். குறை தீர்ப்பு முகாமையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களை சோதனை செய்த பின்னரே ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக மூன்று முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் நடந்து வருகிறது. சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், தினமும், 33 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்குவது, புறப்படும் போதும் பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இருப்பினும் ...