நடுவானில் திக்.. திக்.. விமானத்தில் மோதிய பறவைகள்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மாதந்தோறும் சராசரியாக மூன்று முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் நடந்து வருகிறது.

சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், தினமும், 33 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை விமானம் தரையிறங்குவது, புறப்படும் போதும் பறவைகளை விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இருப்பினும் விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாதம் மூன்று முறை விமானங்கள் மீது பறவைகள் மோதும் சம்பவம் நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரி கூறும் போது

விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் பறவை, நாய் போன்ற விலங்குகளை விரட்டும் பணியில் ஆறு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களிடமிருந்து பறவைகள் விரட்டுவதற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் சுற்றுப் புறப் பகுதிகளில் இறைச்சி குப்பை கொட்டாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சித்திரா பகுதியில் அமைந்து உள்ள பெரிய சாக்கடை கால்வாய் பறவைகள் விமானங்கள் மீது மோதும் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது. என்றும், விமான நிலைய வளாகத்திற்குள் முயல்களும் நடமாட்டம் உள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை முயல் பிடிக்கும் பணியும் நடக்கிறது. ஒவ்வொரு முறையும் 20 முயல் வரை பிடிக்கப்படுகின்றன. பின்னர் வன பகுதிக்குள் விடப்படுகின்றன ஒவ்வொரு முறையும் விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கவும் புறப்பட்டு செல்லவும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் விமான நிலைய நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றும் இந்நிலையில் இன்று 164 பயணிகளுடன் கோவையில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானம் மீது இரண்டு கழுகுகள் இன்ஜினில் மோதியதால் விமானம் உடனடியாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது .இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.