கோவை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இவர்களுக்கு தர்னிஷ் ,வாசுலேகா இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் துப்புரவு வேலைக்காக ...

வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாநில அரசுகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் டெல்லியில் அணிவகுத்து வரும். கடந்த ஆண்டு, வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு ...

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு நேற்று  (ஜன.3) தேவராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க இரு சக்கர வாகனம் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள வெள்ளி குப்பம்பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் என்பவரும் விற்பனையாளராக கரிய பெட்டன், குணசேகரன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள் .நேற்று மாலையில் ஊழியர்கள் மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3பேர் திடீரென கையில் மறைத்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் ரோடு, பாண்டி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56) இவர் மின்வாரியத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா ( வயது 46) மகள் ஜெய் நந்தினி (வயது 19 ) இவர்கள் 3 பேரும் பைக்கில் அன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். தென்திருப்பதி ...

கோவை: திருவள்ளூர் மாவட்டம் கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் தரணி (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 30-ந் தேதி கோவை வந்தார். இங்கு காட்டூர் ராம் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். இதையடுத்து ஓட்டல் ஊழியர் ஒருவர் அறையை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது அவர் ...

கோவையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தனியார் தன்னார்வ அமைப்புகள் சார்பில் ஆண்டு தோறும் கோவையின் வரலாறு கலாசாரம் ஆகியவற்றை போற்றும் வகையில் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 15-வது முறையாக கோவை விழா நிகழ்ச்சி நாளை (4-ந் தேதி) தொடங்கி வரும் ஞயிற்றுக்கிழமை (8-ந் தேதி) வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ...

நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகமும், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏராளமான காட்டுப்பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. கர்நாடக வனத்துறையினர் இறந்த பன்றிகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்தனர். அவற்றை இந்திய கால்நடை ...

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது வாலிபர். இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விருதுநகரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவருக்கு ஒருவரை கடந்த 4 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர். ...

கோவை காந்தி பார்க் பகுதியில் இருந்து தடாகம் செல்லும் சாலையில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்நிலையில் இன்று காலை முத்தன்னன் குளத்தில் பெண்  பிணம் ஒன்றும் மிதப்பதை அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் இதுகுறித்த தகவலை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஆர். எஸ் .புரம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து ...