350 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கம் பிருத்வி -2 என்ற ஏவுகணையை இந்தியா வெற்றி கரமாக சோதனை நடத்தி உள்ளதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஒடிஷா கடற்கரை பகுதியில் உள்ள சந்திப்பூர் என்ற இடத்தில் இந்த சோதனையை நடத்தப்பட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அணுசக்தி ...
தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் மற்றும் ஜனவரி 30ஆம் தேதி வள்ளலார் நினைவு ...
துணிவு, ‘வாரிசு படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படமும் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதனிடையே, வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் திரையரங்குகளில் துணிவு, வாரிசு படங்களுக்கு ...
புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ மூலம் பணம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பணப்பறிமாற்ற நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ...
கோவை அருகே உள்ள பொங்காளியூர், பாலகணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 57 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று வடவள்ளி- லிங்கனூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பழனியப்பா நகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவரது பைக்கும் மோதிக் கொண்டன. இதில் ரங்கராஜ் தலையில் ...
கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 43)வியாபாரி.இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர் இவரது மனைவி ஆற்காட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை செல்ல வேண்டும் என்று நடராஜனிடம் அனுமதி கேட்டார் . அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் ...
கோவை மாவட்டம் அன்னூர் ,ஒட்டர் பாளையம் பக்கம் உள்ள பூலுவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49) விசைத்தறி தொழிலாளி.குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று வீட்டில் இருந்த ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு சென்றார். அங்கு பொங்கல் பரிசாக வழங்கப்பட்ட ரூ ஆயிரத்தை வாங்கிக் கொண்டு டாஸ்மாக் கடையில் மது குடித்தாராம்.இதை இவரது ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31). சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி ...
கோவையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, உதவி இயக்குநர் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) குருபாரதி தலைமை வகித்தார் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவா்கள் மருத்துவரிடம் ...
கோவை: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவர் தினம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி ...













