வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இனி யுபிஐயிலிருந்து பணம் அனுப்பலாம் ..!

புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 10 நாடுகளில் இருந்து யுபிஐ மூலம் பணம் அனுப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேசிய பணப்பறிமாற்ற நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் அங்குள்ள சர்வதேச மொபைல் எண் வழியாக யுபிஐயில் பதிவு செய்து பணம் அனுப்ப அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்டு சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்ஹாங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், இங்கிலாந்து ஆகிய 10 நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐயில் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து பணம் அனுப்பலாம். ஏப்ரல் 30ம் தேதிக்குள் அவர்கள் தங்கள் என்ஆர்இ மற்றும் என்ஆர்ஓ கணக்குகளை சர்வதேச மொபைல் எண்ணுடன் இணைத்து யுபிஐயில் பதிவு செய்ய வேண்டும்.