தமிழகம் முழுவதும் அரசு பெண்களுக்கு இலவச பேருந்து இயக்க வருகின்றது. இந்நிலையில் சிவானந்த காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் சில பெண்கள் இலவச பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. ...
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர்.இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.கோகுல் பாஜக வில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...
பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்புக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. ...
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி தெரிவித்தாா். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ...
இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு யூத வழிபாட்டு தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ...
ராமநாதபுரம்–கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து, கிராமங்தோறும் பவனி நடந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. அதுபோன்ற மாதிரி சிலை ரத பவனியாக தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர். பிப்.18ல் மகா சிவராத்திரி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும். இரவு முழுவதும் ...
கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட கலெக்டர அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கல்குவாரி அமைக்க அனுமதி கோரியுள்ள இடத்தைச் சுற்றி மங்கலகரைப்புதூர், எத்தப்பன் நகர், அம்பேத்கர் நகர், கோடதாசனூர், ராம் நகர், சத்தியா நகர், ரங்கா கார்டன் உள்ளிட்ட பல்வேறு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதனால் அலுவலக வாசல் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் சமீரன் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையை சேர்ந்தவர்கள் பொதுமக்களுடன் வாயில் ...
கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய நகரான கோவையில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாநகரில் முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானாவை அமைத்து வருகின்றனர். கோவை மாநகர போலீசார் போக்குவரத்து துணை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 20 டன் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு 1532 வழக்குகள் பதிவு ...













