கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளது. இதற்காக தற்போது உள்ள விமான நிலையத்தில் அருகில் உள்ள தனியார் நிலங்களை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறது. முன்னதாக நிலம் கொடுப்போர்க்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது இழப்பீடு ...
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கமானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அசாமில் பல ...
குனியமுத்தூர்:ஆந்திராவை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி மனீஷா (வயது 25). இவர்கள் கோவை சுந்தராபுரம் காமராஜர் நகரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மனீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ...
கோவை போத்தனூர் அருகே சாரதா மில் ரோட்டில் எதிர் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் அங்கு வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக தான் செல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்டாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் குடிபோதையில் ...
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக இதர சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை வசூலிக்க அவர்களின் வாகனம், அல்லது மற்ற சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, சாலை விதிகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சாலை ...
கர்நாடகா இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி. இவர் மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவருக்கும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ சா.ரா.மகேஷுக்கும் அரசு நிலம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில், மைசூர் மாவட்ட ஆட்சியராக சிந்தூரி இருந்தபோது அவர் அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக ...
பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் ...
மாரடைப்பால் காலமான பிரபல நடிகர் மயில்சாமியின் உடலுக்கு இன்று இறுதிச்டசங்கு நடைபெறுகிறது. தமிழ் திரையுல்கில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மயில்சாமி(57) . சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் டிரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மயில்சாமி, கோயிலில் இருந்து ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பள்ளபாளையம், பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சசிவர்ணம் (வயது 53 )அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள எல்.அன்டிபைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதியது. இதில் சசிவர்ணம் ...
கோவை பீளமேடு, ஹட் கோ காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19) சூலூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் ...













