வடமாநிலங்களில் மீண்டும் பதிவாகியுள்ள நிலநடுக்கம் – வீதிகளில் மக்கள் தஞ்சம்..!

டகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது. நில நடுக்கமானது, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அசாமில் பல இடங்களில் உணரப்பட்டது.

வட மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றிலும் நேற்று மதியம் 12.54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் இந்தூருக்கு 151 கி.மீ. தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம், பர்வானி, அலிராஜ்பூர், தார், ஜாபுவா, கார்கான், இந்தூர் மாவட்டங்களில் உணரப்பட்டது. நிலநடுக்க பாதிப்புக்குள்ளான இடங்களில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தனர்.