கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் ஆயுதங்களுடன் அவரது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர். அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும் ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ...
இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ஒரு பக்கம் இருக்க, இன்ஃப்ளூயன்சா ஏ வைரசின் துணை வகையான எச்3என்2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், முதியோரையும் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ...
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறை உற்பத்தியை அதிகரிக்க முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பீரங்கிங்களுக்கான 155 மில்லிமீட்டர் துப்பாக்கி, இலகுரக போர் விமானமான தேஜஸ், தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஆகாஷ் ஏவுகணை, சீட்டா ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் கல்வாரி, ஐஎன்எஸ் சென்னை உள்ளிட்ட பல பாதுகாப்புத் துறைத் தளவாடங்கள் இதில் அடங்கும். கடந்த சில ஆண்டுகளில் ...
கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் (வயது 25) கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .இவர் கடந்த 20 21 ஆம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் (வயது 28) என்பவரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். இதற்கு பழி வாங்க கோகுல் கொலை செய்யப்பட்டதாக ...
கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரத்தில் நேற்று ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது சட்டைப் பையில் ஆதார் கார்டு இருந்தது ...
கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினருக்கான விசா விநியோகத்தை மீண்டும் வழங்க சீனா முடிவெடுத்துள்ளது. புதிய பயண ஆவணங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதோடு, மார்ச் 28, 2020 க்கு முன் வழங்கப்பட்ட விசாக்கள், இன்னும் செல்லுபடியாகும் என்று ...
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் ...
கோவை சாய்பாபா காலனி,என். எஸ் .ஆர். ரோட்டில் உள்ள நெசவாளர் காலனி சேர்ந்தவர் ராஜன் (வயது 44) லாரி கிளீனர். இவரது 2 வயது ஆண் குழந்தை தன்வீன். இவன் பிறப்பில் இருந்து நுரையீரல் பாதிக்கபட்டிருந்தான்.இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.இந்த நிலையில் நேற்று தூங்கிக் கொண்டிருந்த தன்வீனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு ...
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் பசரோவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஆனந்தகுமார், ரகு ,அகமது, ஆகியோர் குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அவர்களை துடியலூரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்த விடாமல் அரசியல் ரீதியாக சிலர் தடுப்பதாக புகார் செய்தனர். இதனால் தங்கள் ...












