ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராமபைலூர் தொட்டி கிராமத்தில் ஊராளி இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி இன கிராமத்தில் வசிக்கும் வீடு இல்லாத 46 குடும்பங்களுக்கு அதே பகுதியில் அரசின் சார்பில் வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் 46 வீடுகள் ...

துனிசியாவில் சுமார் 67 அகதிகளை ஏற்றி சென்ற படகுகள் கவிழ்ந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு. துனிசியாவில் படகுகள் கவிழ்ந்த விபத்தில் இத்தாலிக்கு கடல் வழியாக செல்ல முயன்ற 29 அகதிகள் உயிரிழந்தனர். படகுகள் கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன மேலும் 60 அகதிகளை தேடும் பணியில் மீட்பு படை தொடந்து ஈடுபட்டுள்ளது. படகுகள் கவிழ்ந்த ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ருத்திரியம் பாளையத்தில் நேற்று மதுபோதையில் பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்தார். அவரை அந்த ஊர் மக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அன்னூர், சொக்கம்பாளையம் காந்தி காலனி சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக ...

உலக அளவில் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 பில்லியன் மக்கள் என்பது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும். மக்களின் வாழ்க்கைக்கு தண்ணீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் 2 பில்லியன் மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேரணி மூலம் எடுத்துரைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர்மன்ற தலைவர் ...

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக மேயர் பிரியா அறிவிப்பு.. சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா. அதில், ...

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மோகன் இன்று, அதாவது மார்ச் 27 காலை 10 மணிக்கு மாநகராட்சிக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஆண்டில் மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த வரி மற்றும் வாடகைகள் வசூல் செய்யப்பட்டுள்ளதால், இம்முறை பல்வேறு புதிய திட்டங்களும், சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனவும் எதிர்ப்பட்டது. ...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து பல உயிர்களை பலி வாங்கி வரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருச்சியில் ...

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ‘நரேன் பயர் ஒர்க்ஸ்’ தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் நரேன்(எ) நரேந்திரன், அதிமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்த பட்டாசு ஆலையில் காஞ்சிபுரம் ...

கோவை அருகே உள்ள துடியலூர் அரவான் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ் மைக்கேல் பொன் ரத்தினம் ( வயது 38) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள அஞ்சுகம் நகரில் பணிமய மாதா ஸ்டோர் என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.அவரது கடையில் ...